Chennai Book fair Competitionsஆண்டுதோறும் சென்னையில் நடைபெறும் புத்தகக் காட்சியின்போது கல்லூரி மற்றும் பள்ளி மாணவியரிடம் அவர்களது பேச்சு மற்றும் எழுத்துத் திறமைகளை வெளிக்கொணர்ந்து பாராட்டும் பரிசும் வழங்கும் பொருட்டு பல்வேறு நிலைகளில் பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடத்தி, அவர்களிடையே வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவதற்காக புத்தகங்களையும், கலந்துகொள்வோர் அனைவருக்கும் சான்றிதழ்களையும் பபாசி வழங்கி வருகிறது.

சின்னஞ்சிறார்களின் திறமைகளை வளர்ப்பதற்காக ஆண்டுதோறும் ஓவியப்போட்டிகளும் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டு சிறந்த புகைப்படங்களுக்கான போட்டிகள் நடத்தவும், கட்டுரை, சிறுகதைப் போட்டிகள் நடத்தி அதில் தேர்ந்தெடுக்கப்படுபவற்றைப் புத்தகமாக வெளியிடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.