ஆண்டுதோறும் புத்தக காட்சியின்போது சிறந்த எழுத்தாளர்கள், படைப்பாளர்கள், சிறந்த புத்தக விற்பனையாளர்களுக்கு பபாசி பரிசுகள் பலவற்றை வழங்கி கௌரவித்து வருகிறது. ‘பதிப்பகச் செம்மல்’ க.கணபதி விருது சிறந்த நூல் வெளியீட்டாளர்களுக்கும், பதிப்புச் செம்மல் மணிவாசகர் பதிப்பகத்தின் திரு.

மெய்யப்பன் விருது சிறந்த புத்தக விற்பனையாளருக்கும், அழ. வள்ளியப்பா விருது குழந்தைகளுக்கான சிறந்த நூல் எழுதியவருக்கும், ஆர்.கே. நாராயணன் விருது தமிழில் இருந்து ஆங்கிலத்துக்குச் சிறந்த முறையில் நூல்களை மொழி பெயர்த்தவருக்கும், சென்னை புத்தகக் காட்சியின்போது வழங்கப்பட்டு வருகிறது. இந்த வருடத்திலிருந்து பாரி செல்லப்பனார் விருது சிறந்த இலக்கிய எழுத்தாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது.