வணக்கம்!! 2020 புத்தாண்டை முன்னிட்டு தமிழகம் முழுவதும்  “புத்தகங்களுடன்  புத்தாண்டுக் கொண்டாட்டம்” நிகழ்வை நடத்த தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் ஏற்பாடு செய்திருக்கிறது. இந்நிகழ்வில் வாசகர் பதிப்பாளர் மற்றும் எழுத்தாளர் என பலர் பங்கேற்க உள்ளனர். புத்தக விற்பனையை ஊக்குவிக்கும் வகையிலும், புதுப்புது நூல்களுடன் இப்புத்தாண்டை வரவேற்கவும் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  புத்தகம் வாசிப்பதை ஊக்குவிப்பதற்காக டிசம்பர் 31, ஜனவரி – 1 ஆகிய இரண்டு நாட்களுக்கு வாசகர்களுக்கு 10% முதல் அதிகபட்சம் 25% வரை சிறப்புக்கழிவும் வழங்கப்படுகிறது.

இந்த நிகழ்வை நடத்தக் கூடிய பதிப்பாளர், விற்பனையாளர் நிகழ்வு நடைபெறும் இடம் மற்றும் தொடர்பு தொலைபேசி எண்கள் இணைக்கப்பட்டுள்ளது. Download List Here.