49 ஆவது சென்னை
புத்தகக் காட்சி
2026
Jan 08 - Jan 21, 2026 | Nandanam, YMCA Grounds
  • முகப்பு
  • அறிமுகம்
  • இடம்
  • நிருவாகம்
  • படங்கள்
  • புத்தகத் தேடல்
  • முகப்பு
  • அறிமுகம்
  • இடம்
  • நிருவாகம்
  • படங்கள்
  • புத்தகத் தேடல்

போட்டிகள் 2022

45வது சென்னை புத்தகக் கண்காட்சி, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான சிறப்புப் போட்டிகள்

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் நடத்தும் மாணவர்களுக்கான திறன்வளர் போட்டிகளான பன்னாட்டு பேச்சுப் போட்டி, பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி போன்றவை முதன்முதலாக 45வது சென்னை புத்தகக் காட்சி (பிப்ரவரி – 16 முதல் மார்ச் 6 வரை)யில் YMCA மைதானம், நந்தனத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் பங்குபெற விரும்பும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் திரு.பெ.மயிலவேலன், துணைத்தலைவர், பபாசி, அவர்களை 9884041948 என்ற எண்ணிற்குத் தொடர்பு கொண்டு தங்களுடைய பெயர், பள்ளி/கல்லூரி, கைப்பேசி, மின்னஞ்சல் முகவரி கொடுத்து பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். ஒருவேளை பதிவு செய்யாதவர்கள் புத்தகக் காட்சி அரங்கில் நேரில் வந்து பதிவு செய்து கொள்ளலாம்.

ஓவியப் போட்டி (27.02.2022) காலை 8.00 மணி

1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுபபு வரை – ‘நான் ரசித்த இயற்கைக் காட்சிகள்’
6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை – ‘நான் விரும்பும் தேசியத் தலைவர்’
9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை – ‘என்னை கவர்ந்த நூலகம்’

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி (28.02.2022) காலை 9.00 மணி

1,2,3 வகுப்பு : 1. இனியவை கூறல் (அதிகாரம் : 10), 2. அடக்கமுடைமை (அதி. : 13), 3. அழுக்காறாமை (அதி : 17), 4.புறங்கூறாமை (அதி : 19)*
4,5 வகுப்பு : 1. அறிவுடைமை (அதிகாரம் : 43), 2. நட்பு (அதி. : 79), 3. ஒழுக்கமுடைமை (அதி. : 14), 4. இடுக்கண் அழியாமை (அதி. : 63), 5. கல்வி (அதி. : 40) *
6,7,8 வகுப்பு : 1. பண்புடைமை (அதிகாரம் : 100), 2. காலமறிதல் (அதி. : 49), 3. இடன் அறிதல் (அதி. : 50), 4. வலி அறிதல் (அதி. : 48), 5. ஊக்கமுடைமை (அதி. : 60), 6 ஒழுக்கமுடைமை (அதி. : 14), 7. கல்வி (அதி. 40), 8. நட்பு (அதி. : 79). *
9,10 : 1. ஒழுக்கமுடைமை (அதிகாரம் : 14), 2. ஊக்கமுடைமை (அதி. : 60), 3. அறிவுடைமை (அதி. : 43), 4. அடக்கமுடைமை (அதி. : 13), 5. நட்பு (அதி. : 79), 6. காலமறிதல் (அதி. : 49), 7. கல்வி (அதி. : 40), 8. வலி அறிதல் (அதி. : 48), 9. இனியவை கூறல் (அதி. : 10), 10. வாய்மை (அதி. : 30), 11. புகழ் (அதி. 24), 12. அவையறிதல் (அதி. 72).
(* 6,7,8,9,10ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் குறட்பாக்களுக்குப் பொருளும் அறிந்திருக்க வேண்டும். பொருள் நடுவர் அவர்களால் கேட்கப்படலாம்.)

திருக்குறள் சிறப்புப் போட்டி : (28.02.2022) காலை 9.00 மணி

1330 திருக்குறளையும் அதிகார எண்ணைக் கூறினாலோ அல்லது குறளின் முதற்சொல்லைக் கூறினாலோ ஒப்புவித்தல் வேண்டும். குறளுக்கான உரையை எளிய முறையில் கூற வேண்டும். போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் ஏதேனும் ஒரு போட்டியில் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.

பேச்சுப் போட்டி (02.03.2022) காலை 9.00 மணி

6 முதல் 8ஆம் வகுப்பு வரை – நான் விரும்பும் நூல், 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை – நூல்களால் உயர்வோம்.

பன்னாட்டு பேச்சுப் போட்டி (கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள்) (04.03.2022)

1. புத்தகங்களே பெரிய ஆயுதங்கள்,
2. வாசிப்பதால் நான் மனிதன்,
3. தமிழ் இலக்கியங்கள் கூறும் பண்பாட்டு மானிடவியல்

வாசிப்புத் திறனை உலகளவில் மேம்படுத்த பன்னாட்டு பேச்சுப் போட்டியில் பங்குபெறும் மாணவர்கள் 2 நிமிடம் பேசிய வீடியோவை கீழே கொடுக்கப்பட்டுள்ளள Link Fileலில் பதிவு செய்யவும்.
*Link  : https://forms.gle/A2mevgUwzfRDEwSy7

ஓவியப் போட்டி, பேச்சுப் போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி சென்னை புத்தகக் காட்சியில் நேரிடையாக நடைபெறும், போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாண்பமை நீதியரசர் அரங்க.மகாதேவன் அவர்கள் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி சிறப்பிப்பார்கள் என பபாசியின் செயலாளர் எஸ்.கே.முருகன் அவர்கள் தெரிவித்தார்.

Contact Us
No:8, 2nd Floor, Sun Plaza, G.N. Chetty Road, Chennai- 600 006
044-28155238
bapasimail@gmail.com
Information
  • About Us
  • Contact Us
  • Terms & Conditions
  • Refund and Returns Policy
  • Privacy Policy
  • Admission Policy
© 2024 The Book Sellers and Publishers Association of South India (BAPASI) . All Rights Reserved. Website maintained by Invalai