புத்தகக் காட்சியின் சிறப்பு நிகழ்ச்சிகளில் பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டியும், பேச்சுப் போட்டியும் வழக்கம் போல் நடை பெற இருக்கின்றது.
ஓவியப்போட்டி
- ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு –இயற்கைக்காட்சி
- ஆறு முதல் எட்டாம் வகுப்பு – புத்தகக்காட்சி
- ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு – தமிழகத்தின் சுற்றுலா தலங்கள்
- 11 மற்றும் 12 ஆம் வகுப்பு- சுதந்திர போராட்ட தியாகிகள்
ஓவியப்போட்டி ஜனவரி 7 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு புத்தகக்காட்சி வளாகத்தில் நடைபெறும்.
பேச்சுப்போட்டி
- 6, 7, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எனக்கு பிடித்த தேசத்தலைவர்கள் என்ற தலைப்பிலும்
- ஒன்பது பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு என் நாடு என் மொழி என் மக்கள் என்ற தலைப்பிலும்
- 11, 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகள் வாழ்க்கைக்கு வழி காட்டும் திருக்குறள் என்ற தலைப்பிலும்,
பேச்சுப்போட்டி ஜனவரி 8 ஆம் தேதி காலை 8 மணிக்கு புத்தகக்காட்சி வளாகத்தில் நடைபெறும்.
எங்கள் முயற்சிக்கு ஆதரவு தந்து தங்கள் மாணவ மாணவிகள் போட்டியில் கலந்து கொண்டு அவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்திகொள்ள வேண்டுகிறோம்.
நிகழ்வில் வெற்றிபெற்ற மாணவ மாணவியருக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
முதல் பரிசு- ரூ.3000
இரண்டாம் பரிசு- ரூ.2000
மூன்றாம் பரிசு- ரூ.1000
ஆறுதல் பரிசு 10 – ரூ.500
குறிப்பு: பரிசுத்தொகை கூப்பன்களாக மட்டுமே வழங்கப்படும்.
நன்றி.
ஆர். ஈஸ்வர்
தொடர்பு எண்: 94442 18666