
சுவடுகள்
A Bapasi -SICCI Initiative to help connect writers and publishers.
தமிழ்நாடு அரசு மற்றும் தென்னிந்திய வர்த்தக சபை (SICCI)கூட்டாக இணைந்து யாதும் ஊரே என்கிற பன்னாட்டு மாநாடு ஒன்று நடத்த உள்ளது. உலகின் பல பகுதிகளில் வாழும் தமிழர்களைத் தமிழ்நாட்டுடன் இணைத்து அவர்கள் பற்றுதலை அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு வழிமுறைகள் திட்டமிடப்பட்டுள்ளன. மேலும் விவரங்களுக்குக் கீழுள்ள இணைப்பைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
http://ieeeyesist12.org/global_hackathon/
அதில் ஒன்றாக உலகெங்குமுள்ள தமிழ் எழுத்தாளர்களையும் தமிழ்நாட்டிலுள்ள பதிப்பாளர்களையும் இணைக்கக் கூடிய வகையில் நிகழ்ச்சியொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனை ஒருங்கிணைக்க நம்முடைய பபாசி அமைப்பு பணிக்கப்பட்டுள்ளது.
இன்றைக்கு உலகெங்கும் பல நாடுகளில் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களில் எண்ணற்ற தமிழ் எழுத்தாளர்கள் உருவாகி வருகின்றனர்.
அத்தகைய தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வண்ணம் அவர்கள்தம் படைப்பு தமிழ்நாட்டில் மட்டுமின்றி மற்ற நாடுகளுக்கும் சென்றடையும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள சிறந்த பதிப்பாளர்களுடன் இணைக்கும் வகையில் முதல் முறையாக மாபெரும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
இந்த முயற்சியில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள விருப்பம் தெரிவித்த எழுத்தாளர்கள் பதிப்பாளர்கள் விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் ஒருவரை ஒருவர் தொடர்பு கொண்டு புதிய படைப்புகளை உருவாக்குவோம். புத்துலகை படைப்போம்.